பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி வழங்கிய போது நேற்று முன்தினம் மலேசியாவில் வைத்து இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவது சிறந்த விடயமல்ல என்று தெரிவித்துள்ள அவர்,அதேபோல் வடக்கில் பலாத்காரமாக புத்தர் சிலைகள் அமைக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.