தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் – அர்ஜீன ரணதுங்க

305 0

arjunaகாங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் பொழுது பொருளாதாரத்தை போன்று தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வழங்கப்படுமென கௌரவ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார். துறைமுக அதிகாரச் சபையின் அதிகாரிகளை இன்று சந்தித்த வேளையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் பொழுது அண்மைய யாழ்பாணத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின் பொழுது கண்டறிந்த காரணிகள் தொடர்பாக இலங்கை துறைமுக அதிகாரச் சபை அதிகாரிகளை தெளிவூட்டினார்.
கௌரவ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க கடந்த வார இறுதியில் யாழ்பாணத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் பொழுது அமைச்சர் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டார்.வட மாகாணத்திற்கான கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்தின் தற்போதைய நிலை தொடர்பாக விரிவான விளக்கத்தினை அளித்தார். அச்சந்தர்பத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டதாவது இந்திய துணைக்கண்டம் ஊடாக இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருள் வர்தகத்தினை நிறுத்துவதற்கான சிறந்த இடமாக காங்கேசன்துறை துறைமுகம் விளங்குவதாக தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் தான் போதைப்பொருள் போன்ற அநாவசியமான பல பொருட்கள் பெருமளவில் எங்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுகின்றது. எனவே காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்திச் செய்யும் பொழுது இவ்விடயம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்த வேண்டும். தற்சமயம் இந்தியா கிழக்கு பிரதேசத்தில் துறைமுகமொன்றினை நிர்மாணிப்பதற்கு விசேட அவதானத்தை செலுத்தியுள்ளது.

எனவே கூட்டு வர்தக முறைக்கமைவாக காங்கேசன்துறை துறைமுகத்தின் வர்தகத்தினை எம்மால் அபிவிருத்திச் செய்ய இயலும். எது எவ்வாறாயினும் இத்துறைமுகதின் சிவில் நடவடிக்கைகளைப் போன்று பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் பொருட்டு கடற்படையினரின் ஒத்துழைப்பு அவசியமாகின்றதென அமைச்சர் அர்ஜீன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.