அமெரிக்காவில் ஆபாச நடிகை ஒருவர் ரகசியத்தை வெளிபடுத்தாமல் இருக்க டிரம்ப் தன்னுடன் போட்ட ஒப்பந்தம் செல்லாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகை ஸ்டப்பானி கிளிஃபோர்ட். இவர் ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். இந்நிலையில், அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கோர்ட்டில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் மீது ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
அதில் டிரம்ப் 2006-ம் முதல் 2007-ம் ஆண்டு வரையில் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், அப்போது அவருடன் பல இடங்களுக்கு தான் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட பின்னர் தங்களிடையேயான உறவை வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்வதற்காக அவர் முயற்சித்தார், அதற்காக தனக்கு சுமார் 85 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாகவும், அப்போது ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் தொடுத்துள்ள வழக்கில் அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஸ்டப்பானி சார்பில் அவரும், டிரம்ப் சார்பில் அவரது வழக்கறிஞரும் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளனர். முறைப்படி இருவருக்கு இடையேயான ஒப்பந்தங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே கையெழுத்திட வேண்டும். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்து போடாததால் அது செல்லாது என அறிவிக்கக்கோரி ஸ்டப்பானி தொடுத்துள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.