கைப்பற்றப்பட்ட நாமலின் வாகனம் தொடர்பில் வாய் திறந்துள்ள மஹிந்த

306 0

namalகைப்பற்றப்பட்ட நாமலின் வாகனம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போன்றே நாமலுக்கும் குறித்த வாகனம் வழங்கப்பட்டது என்றும்,பின்னர் அவர் அதை வேறொருவருக்கு விற்று விட்டதாகவும் அது தற்போது உரிமையாளரிடம் இருப்பதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாகனத்தின் தற்போதைய உரிமையாளருக்கே தெரியாது பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் வந்துக்கொண்டு செல்லும் வரை எனவும், நாட்டில் அவ்வாறான சட்டங்கள் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது.

நாளை உங்கள் வீட்டிற்கே வந்து உங்களுடைய கெமராவை தூக்கிச் செல்வார்கள் இது உங்களுடையது அல்லவென என மஹிந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அநுராதுபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது ஆனால் பயத்தின் காரணமாக ஊடகவியலாளர்கள் வாய் திறப்பது இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஊடகங்களின் பிரதானிகளை அழைத்து வந்து பகிரங்கமாக திட்டுவதாக தெரிவித்த அவர் தான் அவ்வாறு ஒரு போதும் செய்ததில்லை என்றும், தான் பாராளுமன்றில் கூட ஊடகவியலாளர்களை திட்டியது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டு பின்பு வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் மோட்டார் வாகனம் ஒன்றை நிதி மோசடி விசாரணை பிரிவு  நேற்றைய தினம் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.