டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்திற்கு முன்பாக இலங்கையின் தற்போதைய நிலவரத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வாழ் இலங்கையர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து கடந்த நான்கு தினங்களாக இடம்பெற்றுவரும் இனவாத வன்முறை காரணமாக நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு பெருமளவிலான பொலிஸார், விஷேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கண்டி நிர்வாக மாவட்டத்தில் காலவரையறையற்ற ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பல முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாயல்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பவற்றுக்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன