பேஸ்புக் தொடர்பாக 8 மாதத்திற்குள் 1570 முறைபாடுகள்

310 0

Facebookகடந்த 8 மாதங்களுக்குள் பேஸ்புக் தொடர்பாக 1570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் பேஸ்புக் கணக்குகளில் சட்டவிரோதமாக உள்நுழையும் சம்பவங்கள் தொடர்பாக அதிகம் முறைபாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப்பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளலர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இணையங்களுக்குள் சட்டவிரோதமாக உள் நுழைந்து அதன் தகவல்களை மாற்றியுள்ளமை தொடர்பில் 6 முறைப்பாடுகள் இந்த வருடத்திற்குள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இணையம் ஊடாக நிதி மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பாகவும் இதுவரை 5 முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.