தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஷீகா தொற்று இல்லை

272 0

625.500.560.350.160.300.053.800.900.160.90தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஷீகா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுவரை குறித்த நாடுகளில் ஒரு ஷீகா தொற்றாளர்கள் கூட அடையாளங் காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் கிழக்கு ஆசிய வலய நாடுகளின் 69வது குழு அமர்வுகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆசிய வலயத்திற்கு பொறுப்பான வைத்திய பணிப்பாளர் பூனம் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஷீகா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இரண்டு கோடிக்கு அதிகமானவர்களுக்கு ஷீகா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரித்தானியாவின் லான்செட் என்ற விஞ்ஞான பத்திரிகை ஒன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா,இந்தோனேசியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் ஷீகா தொற்றவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.