எத்தியோப்பியா சிறையில் தீவிபத்து – 23 கைதிகள் பலி

387 0

201609061201238015_23-die-in-Ethiopia-prison-fire_SECVPFஎத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 23 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 23 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள கிலின்ட்டோ சிறைச்சாலையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசியல் கைதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானதாக முன்னர் அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று எத்தியோப்பியா அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிலின்ட்டோ சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து தீயில் இருந்து தப்பிக்க முயன்று, தள்ளுமுள்ளில் சிக்கியும், கூட்டத்தில் மிதிபட்டும் 23 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.