ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்

508 0

201609061220207834_Hours-long-attack-on-Kabul-charity-ends-as-attackers-killed_SECVPFஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள தொண்டு நிறுவனத்தின் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள தொண்டு நிறுவனத்தின் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
காபுலில் உள்ள தொண்டு நிறுவனத்தில் இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் முதலில் இரண்டு வெடிகுண்டுகளை வெடிக்கசெய்த பின்னர் துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் ஒருவர் பலியானார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று எதிர் தாக்குதலை தொடங்கினர். தொடர்ந்து இருதரப்பினர் இடையே சில மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தொண்டு நிறுவனத்தின் உள்ளே இருந்த பத்து வெளிநாட்டினர் உள்பட 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.