தெல்தெனியா பிரதேசத்தில் மீண்டும் பதற்றம்

331 0

திகன, தெல்தெனியா பிரதேசத்தில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

முஸ்லிம் வாலிபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த வாலிபரின் இறுதிக் கிரியைகள் தற்போழுது நடைபெற்று வருகிறன்றன.

இந்நிலையில் பிரதான பாதையோரங்களில் காணப்படும் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது பெரும்பான்மையினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நீர் தாரைப் பிரயோகம் நடத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாகனம் ஒன்றை ரிவேஸ் பண்ணும் போது முச்சக்கர வண்டியில் பட்டு சைட் கண்ணாடி உடைந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட கைகலப்பில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த வாலிபர் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் கடந்த ஒரு வாரங்களாக வைத்தியசாலையில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment