ஈரோடு அருகே மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதி!

868 0

ஈரோடு அருகே மாடுகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாட்டு வண்டியில் திருமண கோலத்தில் புதுமண தம்பதி பயணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோடு அருகே உள்ள காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் பிரவீன் விவசாயி.

இவர் மஞ்சள் விளை வித்து விற்பனை செய்து வந்தார். மேலும் காங்கயம் காளைகளையும் வளர்த்து விற்பனை செய்தார்.

அவருக்கு மாடு வகைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. எனவே அந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் நினைத்தார்.

இந்த நிலையில் அவருக்கும் நத்தக்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி என்பவருக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. அவர்களது திருமணம் நேற்று ஈரோட்டில் நடந்தது.

மாடுகளின் வகைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட பிரவீன் தனது திருமணத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.

திருமணம் என்றாலே மணமக்கள் காரிலும், பல்லக்கிலும் அழைத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் பிரவீன் புதுமையாக தனது புதுமனைவியை அவரது வீட்டுக்கு மாட்டு வண்டியில் அழைத்துச்செல்ல முடிவு செய்தார்.

இதற்காக மாட்டு வண்டி தயார் செய்யப்பட்டது. அதில் மாடுகள் பூட்டப்பட்டு தனது புதுமனைவியை பிரவீன் ஏற்றினார்.

பின்னர் ஈரோட்டில் இருந்து நத்தக்காடு நோக்கி மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றார். நத்த காட்டில் மணமக்களை உவினர்கள் வரவேற்றனர். மாட்டுவண்டியில் திருமண கோலத்தில் சென்ற புதுமண தம்பதிகளை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்

Leave a comment