துபாயில் நடைபெற்ற டியூட்டி பிரி டென்னிஸ் சாம்பியன்சிப் தொடரில் ஸ்பெயின் வீரர் படிஸ்டா ஆகட் முதல் இடத்தை தட்டிச்சென்றார்.
டியூட்டி பிரி டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டிகள் துபாயில் நடந்து வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் படிஸ்டா ஆகட், பிரான்சின் லூகாஸ் பவுலியை எதிர்கொண்டார். இப்போட்டி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய படிஸ்டா முதல் செட்டை 6-3 என
கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடிய படிஸ்டா அந்த செட்டையும் 6-4 என கைப்பற்றினார். இதன்மூலம் ஒரு மணிநேரம் 22 நிமிடம் நடந்த இந்த இறுதிப்போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற படிஸ்டா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இது படிஸ்டா வெல்லும் முதல் ஏடிபி 500 சீரிஸ் பட்டம் ஆகும்.