99 வயதில் காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்த நீச்சல் வீரர்!

284 0

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜார்ஜ் கோரோனஸ் என்பவர் 99 வயதில் ப்ரீஸ்டைல் பிரிவில் 50 மீட்டர் தூரத்தை 56.12 விநாடிகளில் நீந்தி சாதனை படைத்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லண்ட் நகரில் காமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான தகுதிப் போட்டி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது. இதில் 100 முதல் 104 வயது வரை உள்ளவர்களுக்கான பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜார்ஜ் கோரோனஸ் என்பவர் கலந்துகொண்டார். இவருக்கு 99 வயதாகிறது.

50 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் கலந்துகொண்ட ஜார்ஜ் வெறும் 56.12 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். 2014-ம் ஆண்டு இதே பிரிவில் கனடாவை சேர்ந்த நீச்சல் வீரர் பிரிட்டன் ஜான் ஹாரிசன் 50 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 31.19 விநாடிகளில் கடந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை தற்போது ஜார்ஜ் முறியடித்துள்ளார். இதுகுறித்து ஜார்ஜ் கூறியதாவது, நான் சிறிய வயதில் நீச்சல் பயிற்சி எடுத்தேன். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதை விட்டுவிட்டேன். 80 வயதில்தான் மீண்டும் நீச்சலில் ஆர்வம் வந்தது, என்றார்.

Leave a comment