சிரியாவில் இடம்பெறும் இனப்படுகொலைகளுக்கு எதிராக மன்னாரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

279 0

சிரியாவில் இடம்பெற்று வரும் மனித குலத்திற்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கண்டனப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் உட்பட அனைவரினதும் துன்ப துயரங்களை எடுத்துக்காட்டுகின்ற புகைப்படங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் மூர்வீதி ஜீம்மா பள்ளி வாசல் மௌலவி எம்.அசீம், மன்னார் நகரசபை உறுப்பினர் என்.நகுசீன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தையடுத்து ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு உரிய அதிகாரிகளினூடாக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment