யாழ். மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.இந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.இதில் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வுகளில் மீள்குடியேற்றம், கல்வி, நீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் தபால், வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், மின் விநியோகம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி சபைகள், வர்த்தக தொழிற்துறை உள்ளிட்ட துறைசார்ந்த விடயங்கள் ஆராயப்படவுள்ளன.
இந்த கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவவருமான சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன், வட மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மற்றும் மாவை சேனாதிராஜா, சரவணபவன் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களான அ.பரம்சோதி, பா.கஜதீபன், உட்பட திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வுகளில் மீள்குடியேற்றம், கல்வி, நீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் தபால், வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், மின் விநியோகம், நகர அபிவிருத்தி, அதிகார சபை, மற்றும் உள்ளுராட்சி சபைகள் வர்த்தக தொழிற்துறை உள்ளிட்ட துறைசார்ந்த விடயங்கள் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.