ஒரே பாடசாலையில் 10 வருடங்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கும் 5500 ஆசிரியர்களுக்கு மார்ச் மாதம் நடுவில் இடமாற்றம் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 2017 ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒரே பாடசாலையில் 10 வருடங்களை அடைந்துள்ள ஆசிரியர்கள் இந்த இடமாற்றத்துக்கு கருத்தில் கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் இரு கட்டங்களில் முறையான கட்டமைப்பின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இம்மாதம் நடுவில் முன்னெடுக்கப்படும் இடமாற்றம் 3 ஆவது கட்டமாகும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.