இலங்கையில் ஒரு வருடத்துக்கு 48 ஆயிரம் இயற்கையான கருக்கலைவு இடம்பெறுவதாக விசேட வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தக் கருக் கலைவுக்கு பிரதான காரணம் அங்கவீனமான குழந்தை கருத்தரிப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், நாட்டில் தாய் சேய் மரண வீதம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று அனுஷ்டிக்கும் “உலக பிறவி அங்கவீன தினம்” குறித்து சுகாதார கல்விப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கபில ஜயரத்ன இதனைக் கூறியுள்ளார்.