செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் தமிழகம் வந்து கைது செய்வதை தடுக்கும்படி உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.
செம்மரக் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆந்திர போலீசார் தமிழகம் வந்து தொழிலாளர்களை கைது செய்வதை தடுக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஆந்திர காவல்துறையினர் கைது செய்வதை தடுக்கும்படி உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
‘உச்ச நீதிமன்ற விதிகளின்படி ஆந்திர போலீஸ் இங்கு வந்து கைது செய்திருக்கிறதா? என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகினால் பொதுநல வழக்காக அல்லாமல் விசாரிக்கப்படும்’ என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.