தஞ்சை பெரிய கோவிலில் இதுவரை 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மாயமாகியுள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன சிலைகள் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் இன்று விசாரணை செய்தார். ராஜராஜ சோழர் சிலை, அவரது மனைவி வேலம்மாள் சில உள்பட 13 சிலைகள் மாயமாகியுள்ளதாக மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதுவரை 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் காணமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ராஜராஜ சோழர் சிலை உள்பட அனைத்து சிலைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி பொன்மாணிக்க வேல் கூறினார். சிலைகள் காணவில்லை என முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரிய கோவிலில் மாயமான சிலைகள் குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அங்கு தனிப்படை அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனவும் எஸ்.பி தெரிவித்தார்.