பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் 3 வது நாளாக இன்றைய தினம் 80 Km தூரத்தை கடந்து நாளைய தினம் லக்சம்பர்க் நாட்டை சென்றடைய உள்ளது.
இன்றைய தினம் ஆர்லோன் மாநகர முதல்வரை சந்தித்து தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரும் மனுவை மனிதநேய பணியாளர்கள் கையளித்தனர். கடும் குளிரிலும் தளராத உறுதியுடன் தமது நீதிக்கான பயணத்தை மேற்கொள்ளும் இளையோர்களை மாநில முதல்வர் வரவேற்று உணவளித்ததோடு நீதிக்கான பயணம் வெற்றிபெற வேண்டும் எனவும், அதற்கான தமது தார்மீக ஆதரவை நல்குவதாக கூறினார்.
இன்றைய தினம் கடும் குளிராகவும் , பனிப்பொழிவாகவும் இருந்ததால் ஈருருளிப் பயணம் மேற்கொண்ட இரண்டு மனித நேயச் செயற்பாட்டாளர்கள் சிறு விபத்துக்குள்ளாகினார்கள். இருப்பினும் ஓர்மத்தோடு பயணம் தொடர்கிறது.
பனியில் உறைந்த கால்கள் உந்த
மனதில் நிறைந்த ஈழம் வெல்ல
உந்தும் உருளி உணர்வைச் சிந்த
இலக்கை நோக்கும் இளமைக் குருதி .