யாழ் பருத்தித்துறை அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தொகையையே பொதிசெய்து கொண்டிருக்கும் வேளையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்