உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கிராம அபிவிருத்தித் திட்டங்களுக்காக 50 லட்சம் ரூபாவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த நிதியில் ஊழல், மோசடி இன்றி செயற்படுவதாகவும் சிறந்த செயற்திட்டங்களை முன்வைப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டால், குறித்த உறுப்பினருக்கு மேலும் 50 லட்சம் ரூபா ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று(01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.