8 துருக்கி வீரர்கள் பலி!

232 0

சிரியாவில் ராணுவத்துக்கும் குர்திஷ் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் துருக்கியைச் சேர்ந்த எட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் சண்டையிட்டு வந்த நிலையில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. நிறுத்தியது. இதனால், அரசுப்படையினரின் கை ஓங்கிய நிலையில், கடந்த 18-ம் தேதி முதல் அதிபர் ஆதரவு படை – ரஷ்யா இணைந்து கிழக்கு கூட்டா பகுதியில் ஆவேச தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிரியாவின் ஆப்ரின் பகுதியில் துருக்கி ராணுவத்துக்கும், குர்திஷ் போராளிகளுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் எட்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a comment