கோடைக்கால விடுமுறையையொட்டி நெல்லை-கோவை இடையே சிறப்பு ரெயில்

296 0

கோடைக்கால விடுமுறையையொட்டி நெல்லை-கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி உள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடைக்காலத்தில் கூடுதல் சேவைக்காக கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

நெல்லை-கோவை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 6019) ஏப்ரல் 8-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும். கோவை-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (6020), ஏப்ரல் 11-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரை உள்ள அனைத்து புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.35 மணிக்கு நெல்லை சென்றடையும்.

கோவை-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில் (6021), ஏப்ரல் 9-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை அனைத்து திங்கட்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். செங்கோட்டை-கோவை சிறப்பு கட்டண ரெயில் (6022), ஏப்ரல் 10-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment