அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை தாம் நம்பப்போவதில்லையென பரவிபாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.போராட்டத்தில் ஈடுபடும் பரவிபாஞ்சான் மக்களை நேற்றுச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தான் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் கதைத்து உங்களது காணிகளை மீளப் பெற்றுத் தருவேன் என உறுதிமொழி அளித்திருந்தார்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தாம் இனிமேல் எந்தவொரு அரசியல்வாதிகளினதும் வாக்குறுதிகளை நம்பப்போவதில்லையெனவும், தமது இடத்தை மீள ஒப்படைக்கும்வரை தாம் போராட்டத்தைத் தொடர்வோம் என உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.இன்றுடன் ஏழாவது நாளாக போராட்டத்தைத் தொடரும் மக்கள், இன்றிலிருந்து அவ்விடத்தில் கொட்டகை போட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக பரவிபாஞ்சான் மக்களின் எஞ்சியிருக்கும் 10 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.