காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார்.
அதன்பிரகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜயதீபா புன்னியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹந்தி ஏ. பீரிஸ், சிரியானி நிமல்கா பெர்னாண்டோ, மிரக் ரஹீம், சோமரிசி கே லியனகே மற்றும் கணபதிபிள்ளை வேந்தன் ஆகியோர் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக சட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட போதும், குறித்த அலுவலகம் தற்போதே நிறுவப்பட்டுள்ளது.