சுப்ரமணியன்சாமி புகார்

570 0

Tamil_News_large_1549968_318_219ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனை தொடர்ந்து, பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் சக்தி காந்த தாஸ் மீது சுப்ரமணியன்சாமி புகார் கூறியுள்ளார்.பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி, ரிசர்வ் வங்கி கவர்னருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். பிரதமருக்கும் கடிதம் எழுதினார். இதனால் ரகுராம் ராஜன், 2வது முறையாக பதவியில் நீடிக்கப்போவதில்லை எனக்கூறினார். இதனை தொடர்ந்து தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் மீது புகார் கூறினார். ஆனால், இதனை நிராகரித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அரசு அரவிந்த் சுப்ரமணியத்துக்கு ஆதரவாக உள்ளதாகவும், அவரது புகாரை பா.ஜ., ஏற்கவில்லை எனவும் கூறியதை தொடர்ந்து, சுப்ரமணியன்சாமி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

இதனை தொடர்ந்து பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி, பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் மீது புகார் கூறியுள்ளார். சக்திகாந்த தாஸ், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உதவி செய்துள்ளதாகவும், சிதம்பரம் மகாபலிபுரத்தில் நிலம் வாங்க உதவி செய்தது தொடர்பாக, சக்திகாந்த தாஸ் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என கூறியுள்ளார்.

இதனையடுத்து தற்போது சீனாவில் உள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில், நிதியமைச்சகத்தில் பணிபுரியும் ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது நேர்மையற்ற, முறையற்ற வகையில் புகார் கூறப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Leave a comment