பொலிஸாரால் கைது செய்யப்பட வேண்டியவருக்கு, பொலிஸ் அமைச்சு- JVP

480 0

ரணில் விக்ரமசிங்கவைக் கைது செய்யப்படுவதற்குப் பதிலாக தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்றதோ வேறொன்று என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பொலிஸாரினால் கைது செய்யப்பட வேண்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சை தன்னிடம் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தற்பொழுது நாட்டில் ஒருவகையான அராஜக நிலையொன்று உருவாகியுள்ளது. தேர்தல் முடிவடைந்து 3 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் உள்ளுராட்சி சபையை நிறுவ முடியாமல் போயுள்ளது. நாட்டில் அரசாங்கமொன்று இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் குழுவும், மைத்திரிபால சிறிசேனவின் குழுவும்  தமது அதிகார போட்டிக்காக ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்கின்றன. இது சிலபோது ஆவேசமாக மாறிவிடும். சிலபோது பொது அரசியல் மேடைக்கு வந்துவிடும்.

தேர்தல் காலத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்கும் போது ஐ.தே.க.யுடன் இணைய மாட்டோம் என்றனர். தேர்தலின் பின்னரும் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலக்குவதாக ஜனாதிபதி கூறிவந்தார்.

இவ்வாறு பதவி விலக்குவதற்குரிய பிரதமருக்கே தற்பொழுது அவரிடம் இருந்த பதவிக்கும் மேலதிகமாக ஒரு பதவியையும் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த இரு குழுக்களும் மக்களின் தேவையை நிறைவு செய்வதற்குப் பதிலாக தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலேயே முனைப்போடு உள்ளதாகவும் அனுர குமாரதிஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment