கணக்காய்வு சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

255 0

கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

முன்மொழியப்பட்ட தேசிய கணக்காய்வு சட்ட மூலத்தினை மேலும் திருத்தம் செய்வதற்காக வேண்டி சிபாரிசுகளை முன்வைப்பதற்காக கலாநிதி சரத் அமுணுகம அமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டதோடு, சிபாரிசுகளில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்குவதன் அடிப்படையில், தேசிய கணக்காய்வு சட்ட மூலத்துக்கு அங்கீகாரத்தினை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.

Leave a comment