நோர்வே தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு பெப்ரவரி 25ஆம் திகதி 14.00 மணிக்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ்ப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது.
இக் கருத்தரங்கில் பட்டப்படிப்பை முடித்து, தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இளையோர்களால் பல்வேறுபட்ட கற்கைநெறிகளை எவ்வாறான முறையில் மேற்கொள்ளலாம் என்பது பற்றி எடுத்துக்கூறப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல கேள்விகளை கேட்டுத் தெளிவடைந்தனர்.
குறிப்பாக இதில் கலந்துகொண்டோர் இக் கருத்தரங்கானது தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இதனூடாக அதிகளவான பயன்பாடு உள்ளது என்றும் இளையோர் அமைப்பினரனிடம் கேட்டுக்கொண்டனர்.
மேலும் VGS (உயர்நிலை பள்ளி) இற்கான சாத்தியங்கள், மற்றும் அதற்குப் பின்னரான விண்ணப்பச் செயற்பாடுகள் மற்றும் இதர வாய்ப்புக்கள் பற்றியும் உரையாடினோம்.