அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகதானந்த தேரர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் மூன்று இலட்சம் பெறுமதியான சரீரப்பினையிலும் 7500 ரூபா பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது