முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்!

247 0

ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டத்தின் முன்றாம் நாள் நிகழ்வு இன்று (28.02.2018) புதன்கிழமை காலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் கையெழுத்துப் போராட்டத்தினை மாவட்டங்கள் தோறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துச் செல்கின்றது. இக் கையெழுத்துப் போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கிவருகின்றனர்.

Leave a comment