அஜித் பி. பெரேராவின் புதிய அமைச்சுப் பதவி ரத்து ?

244 0

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்த அஜித் பி. பெரேராவின் புதிய அமைச்சுக்கள் செல்லுபடியற்றதாக மாறியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அவர் ஏற்கனவே வகித்த அமைச்சுப் பதவி மீண்டும் நேற்று (27) ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதனையடுத்து புதிதாக வழங்கப்பட்ட பதவி ரத்தாகியுள்ளதாகவும் செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது வழங்கப்பட்ட அமைச்சுக்குப் புறம்பாக நேற்றைய தினம் அவர் ஏற்கனவே வகித்த அமைச்சுப் பதவி வழங்கப்படுவதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், கடந்த ஞாயிறன்று புதிதாக வழங்கப்பட்ட அமைச்சுப் பதவி ரத்தாவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment