பொன்சேகா – மைத்திரி விசேட சந்திப்பு

215 0

பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று காலை 9.00 மணிக்கு விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் அமைச்சர் சரத்பொன்சேகா சந்திப்பொன்றை நடாத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சரத்பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சில அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதனால், அவ்வமைச்சு பிரதமருக்கு வழங்கப்பட்டது.

பிரதமரிடம் உள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சும் தற்காலிகமானது என ஸ்ரீ.ல.சு.க.யின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்னிடம் ஒப்படைத்தால், ஆறு மாதத்துக்குள் ஊழல் மோசடிகளுக்குத் தீர்வு காண்பதாக அமைச்சர் பொன்சேகா பல தடவைகள் தெரிவித்திருந்தார்.

அத்துடன், பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்குமாறு பேராசிரியர் தம்பர அமில தேரர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Leave a comment