காவல்துறையினரின் விசாரணைகளை துரிப்படுத்தும் நோக்கில் தடயவியல் ஆய்வுக்கூடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரதி காவல்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
காவல்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்படவுள்ள இந்த தடயவியல் ஆய்வுக்கூடத்தில் நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக மரபணு பரிசோதனைகளும் இந்த ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.