ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடைகள் குறித்து இலங்கை பேச்சு வர்த்தை நடத்தியுள்ளது.
நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
இதன்காரணமாக இலங்கையில் இருந்து சில பொருட்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்தநிலையில், அமெரிக்கா சில பொருட்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இலங்கை இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பில் தமது அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.