சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண டோஹா கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதமளிவில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டாருக்கான தமது இருநாள் விஜயத்தின் போது, அமைச்சர் ராஜித சேனாரட்ண, கட்டாருடனான சுகாதார துறை ஒத்துழைப்புகள் குறித்து அவதானம் செலுத்துவார் என கட்டாருக்கான இலங்கை தூதுவர் டபிள்யூ.எம். கருணாதாஸ தெரிவித்தார்.
அத்துடன், வர்த்தகம் முதலீட்டு மற்றும் எரிவாயு தொடர்பிலும் இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.