சென்னையில் ரூ.1.62 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல்

5451 0

201606240215113484_Rs162-crore-worth-5-kg-gold-seized-in-Chennai_SECVPFரூ.1.62 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை கடத்திய 2 பேரை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.இதுகுறித்து வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியா-மியான்மர் இடையே தரை வழியாக தங்கக்கடத்தல் நடப்பதாக வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே இதுபற்றிய உண்மை நிலையை கண்டறிவதற்காக தனி குழு அமைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து ரெயிலில் செல்லும் பயணிகள், சந்தேகத்துக்கு இடமான நபர்கள், அவர்களின் பெட்டிகள் போன்றவற்றை ரகசியமாக கண்காணித்து வந்தோம். 22-ந் தேதியன்று வெளிநாட்டில் இருந்து வந்திருந்த சிலரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது.

அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில், கடத்தல் தங்கம் அவர்களிடம் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் ரெயில் மூலம் சென்னைக்கு வந்திருந்தனர். கடத்தல் செய்யும் 2 நபர்களுடன் மேலும் சில பயணிகள் வந்திருந்தனர். தடை செய்யப்பட்ட பொருள் எதையும் கொண்டு வரவில்லை என்று அவர்கள் 2 பேரும் முதலில் மறுத்தனர். பின்னர் அலுவலக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், தங்க கடத்தலை ஒப்புக் கொண்டனர். அவர்களின் பெயர் சேக் முகமது மற்றும் நிஜாம்.

அவர்களிடம் இருந்து 27 வெளிநாட்டு தங்கப் பாளங்களும், தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. அவை 24 கேரட் தங்கமாகும். 3 சூட்கேஸ்களில் தனி அறைகளை அவர்கள் உருவாக்கி அதை அங்கு மறைத்திருந்தனர்.கடத்தலில் பிடிபட்ட தங்கத்தின் எடை 5.322 கிலோவாகும். இதன் மொத்த மதிப்பு ரூ.1.62 கோடி. அவர்களிடம் இருந்து தங்கம் கைப்பற்றப்பட்டது. சுங்கவரிச் சட்டத்தின் கீழ் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment