எச்.ஐ.வி சோதனை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

341 0

download (2)கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் எச்.ஐ. வைரஸ் தொற்று தொடர்பான சோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு மையத்தின் இயக்குநர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரையிலுமான காலப்பகுதிக்குள் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் எச்.ஜ வி தொற்று தொடர்பான சோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் 30 சதவீதமான ஆண்கள் ஓரின சேர்க்கையினால் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.