மாணவர்களை உலக தலைவர்களாக உருவாக்க வேண்டும்

331 0

201609050844487739_TN-governor-request-Teachers-need-to-develop-global-leaders_SECVPFஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மாணவர்களை உலக தலைவர்களாக உருவாக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ராதாகிருஷ்ணன், இந்திய கல்விக் கொள்கை சர்வதேச தரத்துடன் இருக்கவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் இருந்தார். அதனால், அவர் மீது ஒவ்வொரு இந்தியர்களும், குறிப்பாக ஆசிரியர்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்துள்ளனர்.

தற்போது நாம் இருக்கும் நல்ல நிலைக்கு வர காரணமான நம்முடைய ஆசிரிய பெருமக்களுக்கு இந்த நல்ல நாளில் நன்றி தெரிவித்து மரியாதை செலுத்துவோம். அதே நேரம், நம்முடைய மாணவ செல்வங்களை உலக தலைவர்களாக உருவாக்கும் விதமாக கல்வியில் அவர்களுக்கு நல்லதொரு அடிப்படையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப தங்களை ஆசிரியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.