யாழ்ப்பாணத்திலிருந்து 20 இலட்ச ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருளைக் கொண்டு வந்த நபர் ஒருவர் ஜிந்துப்பிட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் கொக்கெய்னை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
23 வயதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் – இளவாலைப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.