வெளியாரின் அச்சுறுத்தலுக்கு தான் ஒருபோதும் அடிபணியப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருநாகலில் நடைபெற்ற சிறீலங்கா சுதந்திக்க கட்சியின் 65ஆவது மாநாட்டில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி கைச்சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.
தனது தலைமையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் சூளுரைத்தார்.
இந்த மாநாட்டில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த மகிந்தராஜபக்ஷ ஆதரவாளர்கள் 38 பேர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.