கிராமின் வங்கித் திட்டத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நோபல் பரிசு பெற்ற நேபாளப் பேராசிரியர் யூனுசை சிறீலங்காவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கு வருகை தந்து, அங்கே பெருமளவான வளங்கள் காணப்படுகின்றன எனவும் அவற்றை வைத்து அங்கே ன் வங்கித் திட்டத்தினை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் அழைத்துள்ளார்.
வடக்குக் கிழக்கில் இளைஞர்கள், யுவதிகள், விதவைகள் எனப் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும், அவர்களுக்கு சுயமாகத் தொழில் செய்யக்கூடிய வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க உதவுமாறும் றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்மூலம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.