தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யேர்மன் தலைநகர் பேர்லினில் இன்றைய தினம் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது இந் நிகழ்வில் தமிழ் உறவுகள் கலந்துகொண்டு தாயக மக்களுக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கோரியதோடு தொடரும் இனவழிப்பின் கூறுகளில் எங்கள் தமிழினம் தொடர்ந்தும் அடக்குமுறைகளில் சிதையும் உண்மைகளை உலக சமூகத்திற்கு எடுத்துரைத்தனர்.
யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்துக்கு உடனடியான நீதி கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கையோடு மனு கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.