உடுவில் மகளில் கல்லூரி அதிபரை பாடசாலையிலிருந்து விலக்கியமைக்கு சுமந்திரனே காரணம்

360 0

55216555யாழ்ப்பாணம் மாவட்டம், உடுவில் மகளிர் கல்லூரி அதிபரை உடனடியாக கல்லூரியை விட்டு விலகிச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் அறிவித்தற்குப் பின்புலமாக தென்னிந்தியசத் திருச்சபை ஆயர் திரு தியாகராயா மற்றும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரே உள்ளனர் என அப்பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாகத் தெரியவருவதாவது, தற்போது தென்னிந்தியத் திருச்சபை இரண்டாகப் பிரிந்து செயற்பட்டு வருவதாகவும், இதன் காரணமாகவே தென்னிந்தியத் திருச்சபைக்குப் பொறுப்பான ஆயர் திரு தியாகராயாவும் அவரது சட்ட ஆலோசகராகக் கடமையாற்றும் திரு.சுமந்திரன் அவர்களும் இணைந்து குறித்த அதிபரை பாடசாலையைவிட்டு வெளியேற்றினார்கள் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை அவர்கள் செய்வதற்கு 5ஆம் திகதி திறக்க வேண்டிய பாடசாலையினை 8ஆம் திகதிவரை ஒத்திவைத்து அதற்கிடையில் 7ஆம் திகதிக்குள் தற்போதைய அதிபரை பாடசாலையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும். இதில் மதம் சார்ந்த பிரச்சனை இருப்பதால் தாமும் மதம் சார்ந்து சிந்திப்பதாகவும் அதற்காக அங்கஜன் ராமநாதனிடம் உதவி பெறப்போவதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், திரு சுமந்திரன் அவர்கள் தனது அதிகாரத்தை முறைதவறிப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டிய மக்கள், அவரோ அல்லது அவரது மனைவியோ மழைக்குக்கூட இந்தப் பாடசாலையில் ஒதுங்காதவர்கள் எப்படி எமது பாடசாலைப் பிரச்சனையில் தலையிடமுடியும் எனவும் ஆக்ரோசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.