பண்டாரகம, அடுலுகம பிரதேசத்திலிருந்து வங்கி நகை ஏலவிற்பனை ஒன்றுக்கு சிலருடன் சென்ற முஹம்மட் நஸ்ரின் (35) என்னும் வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் தந்தை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) கந்தளாயில் உள்ள விடுதியொன்றில் தங்கி ஏலவிற்பனைக்கு சென்ற குறித்த வர்த்தகரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் காணப்பட்டதாகவும் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.