2017ஆம் ஆண்டு இலக்கம் 17 கீழான மாகாணசபைகள் வாக்களிப்பு (திருத்தம்) சட்டத்திற்கு அமைவாக புதிய கலப்பு வாக்களிப்பு முறை [தொகுதிவாரி (Mixed electoral system) , எளிமையான பெரும்பாண்மை (First past the post voting), தனிப்பட்ட பெரும்பாண்மை (Proportional representation )] தொடர்பில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் தேர்தல் தொகுதிக்காக பன்முகப்படுத்தப்பட்ட முறைக்கமைவாக 50 சதவீத பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டும். மேலும் 50 சதவீதம் மாவட்ட மட்ட பல்லின பிரதிநிதித்துவ முறை (அதாவது மேலதிக பட்டியல்)அமைவாக தெரிவுசெய்யப்படவேண்டும். இதற்கு அமைய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களைக்கொண்ட எல்லை நிர்ணயக்குழு ஒன்று நிர்ணயிக்கப்பட்டது. தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை நிர்மாணிப்பதற்கான அதிகாரம் இதற்கு வழங்கப்பட்டது.
அதிகாரம் வழங்கப்பட்ட நாள் முதல் நான்கு மாத காலப்பகுதிக்குள் இந்த குழு தயாரித்த மாகாணசபைகள் வாக்களிப்பிற்கான எல்லைநிர்ணய குழுவின் அறிக்கை மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது . இதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்த குழுவின் தலைவர் கலாநிதி கே.தவலிங்கம் ஏனைய உறுப்பினர்களான பேராசிரியர் எஸ்எச் ஹிஸ்புல்லா , கலாநிதி அனிலாடயஸ் பண்டாரநாயக்க, பிஎம் ஸ்ரீவர்த்தன(முன்னாள் மேலதிக தேர்தல் ஆணையாளர்) எஸ்.விஜயசந்திரன் (பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவிஞ்ஞானமதிப்பீடு) கலந்துகொண்டனர்.