அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் – கல்வி அமைச்சர்

251 0

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் பெருமளவில் காணப்பட்டதுடன் கடந்த இரண்டு வருட காலப்பகுதயில் இதற்கு ஏற்ற தகுதியான தரத்தை கொண்டவர்கள் இருக்கவில்லை எனவும் இதன் காரணமாக அதிபர்கள் இணைத்து கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி நிர்வாக சேவையில் 852 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் இவர்களுக்கு ஒரு வருடகால பயிற்சி வழங்கப்பட்டதுடன் அதிபர் தரம் III க்கு சுமார் 4 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விரைவில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 353 ஆகும். நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 121 ஆகும்.

நிரந்தர அதிபர் இல்லாத தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும் இதற்காக அறிவிப்பை வெளியிடுவதற்காக தேசிய பாடசாலை பட்டியல் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசசேவை ஆணைக்குழவின் கல்வி சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பட்டுயிருப்பதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment