கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று ஓராண்டை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட ஐவர் உயிரிழந்த நிலையில், இந்த மக்களுக்கான தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
யுத்தகாலத்திலும் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டகாலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில்உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 366 வது நாளாக தொடர்கிறது.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை என நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் அறிவித்திருந்த நிலையிலும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது.