சட்டவிரோதமான முறையில் சிக்கரெட்டுக்களை இந்நாட்டுக்கு கொண்டுவந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த குறித்த நபர் சூட்சுமமான முறையில் தனது பயணப்பொதிக்குள் குறித்த சிகரெட்டுகளை மறைத்து கொண்டு வந்துள்ளதாக சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பயணப்பொதியில் 16,000 சிக்கரெட்டுக்கள் காணப்பட்டதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 8 இலட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட குறித்த சிக்கரெட்டுக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு 50,000 ரூபா தண்டப்பணம் வித்திக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.